கிழக்கு மற்றும் மேல் North Island இல் இன்றும் நாளையும் கனமழை பெய்யக்கூடும் என்று MetService கூறுகிறது.

இதனிடையே ஆக்லாந்திற்கு வடக்கே 50 கிமீ தொலைவில் உள்ள ஒரு நகரம் இரவில் வெள்ளத்தில் மூழ்கியது, இருப்பினும் வெள்ளம் தற்போது குறைந்துவிட்டது என்று புஹோய் டீரூம்ஸ் ஊழியர்கள் தெரிவித்தனர்.

தெற்கு Wairarapa கடுமையான வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளது.

மாநில நெடுஞ்சாலை 53 இல் Martinborough இற்கு செல்லும் Waihenga பாலம் வெள்ளம் காரணமாக மூடப்பட்டது.

Ponatahi பாலம் இன்று காலை மூடப்பட்டு பின்னர் மீண்டும் திறக்கப்பட்டது.

South Island இல், கடந்த இரண்டு நாட்களாக நெல்சன் மற்றும் Marlborough இற்கு பலத்த காற்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நெல்சனுக்கு அருகிலுள்ள Hira மற்றும் Rai பள்ளத்தாக்கு இடையேயான மாநில நெடுஞ்சாலை 6 நேற்று இரவு மரங்கள் விழுந்ததால் மூடப்பட்டதாக Waka Kotahi தெரிவித்தது.

வாகன ஓட்டிகள் மாற்று வழிகளை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டனர்.

இதனிடையே இன்று காலை மேல் South Island இன் சில பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு காணப்படும் என MetService தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.