பொலிஸாரின் தொடர்ச்சியான கும்பல் அடக்குமுறை நடவடிக்கையின் ஒரு பகுதியாக Christchurch இல் கில்லர் பீஸ் கும்பலுடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது துப்பாக்கி மற்றும் கணிசமான அளவு தோட்டாக்கள் மற்றும் கஞ்சாவையும் கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

38 வயதான நபர் Bryndwr புறநகர் பகுதியிலுள்ள Easrnslaw Crescent உள்ள ஒரு வீட்டில் கைது செய்யப்பட்டார்.

மேலும் பிணையை மீறியமை, சட்டவிரோதமாக துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகளை வைத்திருந்தமை மற்றும் விநியோகத்திற்காக கஞ்சா வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் அந்த நபர் மீது சுமத்தப்பட்டுள்ளன.

Christchurch CIB இன் டிடெக்டிவ் சார்ஜென்ட் டிம் ஸ்டெர்ன், போதைப்பொருள் மற்றும் வன்முறை நடத்தையிலிருந்து சமூகங்கள் மற்றும் குடும்பங்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதில் பொலிஸார் உறுதிபூண்டுள்ளனர் என்றார்.

ஆயுதமேந்திய, ஆபத்தான கும்பல் இணைப்புகளைக் கொண்ட ஒரு நபர் இனி அவரைச் சுற்றியுள்ளவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்த முடியாது என்பதை இந்த கைது உறுதிப்படுத்துகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.

கிறிஸ்ட்சர்ச் CIB இன் துப்பறியும் இன்ஸ்பெக்டர் ஸ்காட் ஆண்டர்சன், "கும்பல் தொடர்பான வன்முறை மற்றும் போதைப்பொருள் குற்றங்களை பொலிசார் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என்றார்.

ஆபரேஷன் கோபால்ட்டின் கீழ், எங்கள் சமூகங்களில் கும்பல்களால் சட்டவிரோதமாக துப்பாக்கிகளைப் பயன்படுத்துவதை நாங்கள் தொடர்ந்து குறிவைப்போம் என அவர் குறிப்பிட்டார்.