Hawke's Bay நகர்ப்புற பகுதியான  ஃபிளாக்ஸ்மீரில் சனிக்கிழமை இரவு டாக்ஸி டிரைவர் மீது கடுமையான தாக்குதல் நடத்திய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் டிரைவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இரவு 11.20 மணியளவில் இந்த தாக்குதல் சம்பவம் குறித்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.

காயப்படுத்தும் நோக்கில் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் பேரில் 32 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.