நியூசிலாந்தில் உள்ள இலங்கை சமூகத்தை சேர்ந்தவர்கள், இலங்கையின் ஜனாதிபதி பதவி விலகுவதில் மகிழ்ச்சியடைகிறார்கள்.

இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதர நெருக்கடி காரணமாக ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் நேற்றைய தினம் ஜனாதிபதியின் இல்லத்தை முற்றுகையிட்டு, வன்முறை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் அவரது வீடுகளுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதை அடுத்து, இலங்கையின் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் இணைந்து பதவி விலகவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

புதிய அரசாங்கம் அமைந்தவுடன் பதவியை விட்டு விலகுவதாக விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நியூசிலாந்தில் ஐக்கிய இலங்கை சங்கத்தின் தலைவர் ரங்கித் நாணயக்கார கூறுகையில், ஜனாதிபதி நீண்ட காலத்திற்கு முன்பே சென்றிருக்க வேண்டும்.

நேற்று ஒரு பெரிய திருப்புமுனையாக இருந்தது  என்பதில் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக நான் நினைக்கிறேன் என நாணயக்கார கூறினார்.

70 வருடங்களில் இலங்கையின் மோசமான பொருளாதார நெருக்கடியானது கடுமையான தட்டுப்பாட்டைத் தோற்றுவித்துள்ளது, உணவு, எரிபொருள் மற்றும் பிற தேவைகளுக்கு மக்கள் சிரமப்படுகின்றனர்.

ஜனாதிபதியின் கீழ் புதிய பிரதமரும் இடைக்கால அரசாங்கமும் நியமிக்கப்படலாம் என இலங்கையின் சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.