Hawke's Bay இல் நோரோவைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

பிராந்தியம் முழுவதும் எட்டு தொற்றுகள் பதிவாகியுள்ளன.

ஒன்பது நோயாளிகள் மற்றும் ஒன்பது ஊழியர்களுக்கு நோரோவைரஸ் இருப்பதால் ஹேஸ்டிங்ஸ் மருத்துவமனையில் ஒரு நோயாளர் பிரிவு பல நாட்களாக முடக்கப்பட்டுள்ளது.

நேப்பியர் மற்றும் ஹேஸ்டிங்ஸ் முழுவதும் குழந்தை பராமரிப்பு மையங்களில் ஏழு பேருக்கு இந்த தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் அறிகுறிகள் வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சல்.

பொதுவாக இந்த அறிகுறிகள் 24 மணி நேரம் நீடிக்கும்.

கைகளை நன்கு கழுவுவது இந்த தொற்று பரவுவதைத் தடுக்க உதவும் என Hawke's Bay மாவட்ட சுகாதார வாரியம் தெரிவித்துள்ளது.