கிறிஸ்ட்சர்ச் புறநகர் பகுதியான Yaldhurst இல் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அரை கிராமப்புற புறநகர் பகுதியில் இந்த சம்பவம் காலை 11.20 மணியளவில் நடந்ததாக கூறப்படுகிறது.

Pound வீதியிலுள்ள பணியிடமொன்றில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இரண்டு St john ஆம்புலன்ஸ்கள், மற்றும் ஒரு மேலாளர் சம்பவ இடத்திற்கு வருகை தந்தனர்.

மேலும் இரண்டு சிறப்பு புலனாய்வாளர்கள் தளத்தில் இருப்பதாக 
தீயணைப்பு மற்றும் அவசரநிலை NZ (FENZ) செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் WorkSafe இற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.