வெலிங்டனில் 3 பேர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்திய பொலிஸார், 29 வயதான மனா லாசன் என்ற நபரை கைது செய்ய பிடியாணை பிறப்பித்துள்ளனர்.

குறித்த நபர் ஆயுதம் ஏந்தியிருப்பதாக நம்பப்படுவதாகவும், அவரை அணுகக்கூடாது என்றும் டிடெக்டிவ் மூத்த சார்ஜென்ட் டிம் லீட்ச் தெரிவித்தார்

ஏப்ரல் 23 அன்று தலைநகரில் உள்ள டிக்சன் தெருவில் இந்த துப்பாக்கிச் சூடு நடந்தது.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் பொலிஸார் தொடர்ந்து அடையாளம் கண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பதை நாங்கள் சமூகத்திற்கு உறுதியளிக்க விரும்புகிறோம், இது ஒருவருக்கொருவர் தெரிந்த இரண்டு குழுக்களுக்கு இடையிலான மோதலின் பின்னர் நடந்த சம்பவமாக தோன்றுகிறது" என்று லீட்ச் கூறினார்.

வெலிங்டன் மற்றும் ஆக்லாந்தில் குறித்த நபர் இருக்கும் இடத்தைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் 111 என்ற எண்ணில் காவல்துறையை தொடர்பு கொண்டு தகவல் வழங்குமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இன்று, இச் சம்பவம் தொடர்பில் 19 வயது வெலிங்டன் இளைஞனை, கடுமையான உடல் ரீதியான தீங்கு விளைவிக்கும் நோக்கத்துடன் காயப்படுத்துவதற்கு துணையாக இருந்ததற்காக பொலிசார் கைது செய்தனர்.

மேலும் இந்த வார இறுதியில் அவர் வெலிங்டன் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என பொலிஸார் தெரிவித்தனர்.