இன்று நியூசிலாந்தில் 6636 கொவிட் தொற்றுகள் சமூகத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட 07 பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நியூசிலாந்தில் இதுவரை கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 757 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் வெளிநாட்டிலிருந்து நியூசிலாந்துக்கு வருகைதந்த மற்றொருவருக்கு ஒமிக்ரோனின் மாறுபாடான BA.4  வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே ஏப்ரல் 22 ஆம் திகதி தென்னாப்பிரிக்காவில் இருந்து நியூசிலாந்து வந்த ஒரு நபருக்கு BA.4 வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டதாக நேற்று அமைச்சகம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் BA.4 இரண்டு நபர்களும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தென் ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவில் BA.4 வைரஸ் பதிவாகியுள்ளதாகவும் நியூ சவுத் வேல்ஸில் உம் சில நாட்களுக்கு முன்பு இந்த வைரஸ் அடையாளம் காணப்பட்டதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.

இதனிடையே தீவிர சிகிச்சை பிரிவில் 12 பேர் உட்பட 480 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.