நியூசிலாந்தில் கொவிட்-19 சோதனையின் புதிய வடிவத்தை அரசாங்கம் பரிசோதித்து வருகிறது.

இந்த புதிய சோதனை முறை LAMPகள் என்று அழைக்கப்படுகின்றன‌ (Loop Mediated Isothermal Amplification)

அவை சுயமாக நிர்வகிக்கப்பட்டு 30 நிமிடங்களில் முடிவுகளைத் தருகின்றன.

அதிக உணர்திறன் மற்றும் PCR சோதனைகளைப் போலவே அவை 98 சதவிகிதம் துல்லியமான முடிவை தருவதாக அதன் நிறுவனம் கூறுகிறது.

கொவிட்-19 பதிலளிப்பு இணை அமைச்சர் டாக்டர் ஆயிஷா வெரால் இன்று இந்த புதிய பரிசோதனை முறையை அறிவித்தார்.

LAMP சோதனைகள் PCRகளை விட மலிவானவை மற்றும் மிகவும் வசதியானவை. அவை சுயமாக நிர்வகிக்கப்படுகின்றன மற்றும் பயனர்களுக்கு 30 நிமிடங்களுக்குள் முடிவுகளை வழங்குகின்றன" என்று அவர் கூறினார்.

LAMP சோதனையை பரிசீலிக்க
சுமார் 30 ஏர் நியூசிலாந்து ஊழியர்களுக்கு இந்த சோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த சோதனையின் நோக்கம், சோதனையை எளிதில் சுயமாக நிர்வகிக்க முடியும் என்பதை நிரூபிப்பதாகும், மேலும் இதில் பங்கேற்கும் ஏர் நியூசிலாந்து குழுவினர் முடிவுகளை விரைவாக பெற முடியும்" என்று டாக்டர் வெரால் கூறினார்.

பயணிகள், எல்லைப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முக்கியமான பணியாளர்கள் பயணம் செய்வதற்கு முன் அல்லது வேலையைத் தொடங்குவதற்கு முன் விரைவான சோதனை முடிவை பெற இதனை பயன்படுத்தலாம்.

வயதானவர்கள் பராமரிப்பு வசதிகள் மற்றும் மருத்துவமனைகள் போன்ற அதிக ஆபத்துள்ள அமைப்புகளுக்கும் LAMP சோதனைகள் பயன்படுத்தப்படலாம் என அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் ஏர் நியூசிலாந்து ஊழியர்களுடனான இந்த LAMP சோதனை முடிந்ததும், சுகாதார இயக்குநர் ஜெனரலுக்கு அறிக்கை அளிக்கப்படும்.

மேலும் முன்பே இதை நாம் பயன்படுத்தியிருக்க வேண்டும். இது உலகம் முழுவதும் பல நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.