வெலிங்டனில் சுமார் 100 இளைஞர்கள் தெருவில் மோதலில் ஈடுபட்டதை அடுத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றிரவு 11 மணிக்கு முன்னதாக நியூடவுனில் (Newtown) உள்ள ஸ்டோக் தெருவில் இடம்பெற்ற குறித்த மோதல் சம்பவத்திற்கு  பொலிஸார் வரவழைக்கப்பட்டனர்.

அதிகாரிகள் வந்ததும், சில வாலிபர்கள் கேன்கள் மற்றும் பிற பொருட்களை அவர்கள் மீது வீசத் தொடங்கினர் என்று பொலிஸார் ஒரு அறிக்கையில் தெரிவித்தனர்.

பின்னர் சண்டையை நிறுத்த சுமார் 35 பொலிஸார் தேவைப்பட்டனர்.

தெற்கு வார்டுக்கான வெலிங்டன் நகர கவுன்சிலர் Fleur Fitzsimons எதிர்காலத்தில் இதுபோன்ற விடயங்களை எவ்வாறு தடுக்கலாம் என்பதை கவுன்சில் ஆராயும் என்றும் கூறினார்.

நாங்கள் இந்த விடயத்தை ஆராய்ந்து, அது எப்படி நடந்தது என்பதை கண்டறிவோம், மேலும் இது மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதிசெய்ய எல்லா நடவடிக்கைகளையும் எடுப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட நபர் மீது அமைதியை சீர்குலைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.