South Island இன் சில பகுதிகளில் இன்று கனமழை மற்றும் கடுமையான சூறாவளி வீசக்கூடும்.

South Island இன் கீழ் மற்றும் மத்திய பகுதிகளில் ஒரு வானிலை அமைப்பு மெதுவாக வடக்கு நோக்கி நகர்வதால், Metservice கடுமையான வானிலை எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இன்று பிற்பகல் முதல் Canterbury ஏரிகள் பகுதியில் கனமழையை எதிர்பார்க்கலாம் என அது தெரிவித்துள்ளது.

Canterbury உயர் நாடு மற்றும் Arthur's Pass பகுதியில் கடுமையான புயல் வீசக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.