கிரேமவுத் (Greymouth) அருகே இடம்பெற்ற ஒரு விபத்தில் ஒரு பெண் உயிரிழந்ததுடன் மூன்று பேர் காயமடைந்ததை அடுத்து பொலிஸார் சாட்சிகளை முறையிடுகின்றனர்.

நேற்று மாலை 6.15 மணிக்குப் பிறகு, கிரேமவுத்தின் கிழக்கே ஸ்டில்வாட்டர் (Stillwater) அருகே மாநில நெடுஞ்சாலை 7 இல் தெற்கு நோக்கிச் சென்ற கார் ஒன்று வடக்கு நோக்கிச் சென்ற கார் மீது மோதியதாக காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு நோக்கி காரை ஓட்டிச் சென்ற 56 வயதுடைய பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

தெற்கு நோக்கி பயணித்த காரின் ஓட்டுனர் காரில் இருந்து தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார்.

அவர் கிறிஸ்ட்சர்ச் மருத்துவமனைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிப்பதாக
பொலிஸார் தெரிவித்தனர்.

வடக்கு நோக்கி சென்ற காரில் பயணித்த இரண்டு பயணிகள் கடுமையான காயங்களுக்கு ஆளாகினர், ஆனால் உயிருக்கு ஆபத்தும் இல்லை, அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

நேற்றைய தினம் இரவு காட்சிப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது வீதி மூடப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விபத்தை நேரில் பார்த்த எவரும் 105 என்ற எண்ணில் காவல்துறையை தொடர்பு கொண்டு கோப்பு எண் 220501/3591 ஐ மேற்கோள் காட்டி தகவல்களை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.