இன்று நியூசிலாந்தில் 5656 கொவிட் தொற்றுகள் சமூகத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட 09 பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நியூசிலாந்தில் இதுவரை கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 723 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் வெளிநாட்டிலிருந்து நியூசிலாந்துக்கு வருகைதந்த ஒருவருக்கு ஒமிக்ரோனின் மாறுபாடான BA.4  வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த வைரஸ் நியூசிலாந்தில் அடையாளம் காணப்படுவது இதுவே முதல் முறையாகும்.

ஏப்ரல் 22 ஆம் திகதி தென்னாப்பிரிக்காவில் இருந்து நியூசிலாந்து வந்த ஒரு நபருக்கே இந்த BA.4 வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் குறித்த நபர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

தென் ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவில் BA.4 வைரஸ் பதிவாகியுள்ளதாகவும் நியூ சவுத் வேல்ஸில் உம் சில நாட்களுக்கு முன்பு இந்த வைரஸ் அடையாளம் காணப்பட்டதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.

இந்த மாறுபாடு வேகமாக பரவக்கூடியது அல்லது கடுமையான நோயை ஏற்படுத்தும் என்பதற்கு இன்றுவரை எந்த சான்றும் இல்லை என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இன்று நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகளில் ஆக்லாந்தில் 606 பேரும், நோர்த்லேண்டில் 139 பேரும், வைகாடோவில் 341 பேரும், Bay of Plenty இல் 175 பேரும், Lakes இல் 116 பேரும், Hawke's Bay இல் 149 பேரும், Mid Central இல் 202 பேரும்,  Whanganui இல் 64 பேரும், Taranaki இல் 149 பேரும், Tairawhiti இல் 99 பேரும், Wairarapa வில் 58 பேரும், Capital and Coast இல் 360 பேரும், Hutt Valley வில் 152 பேரும், Nelson Marlborough வில் 222 பேரும், Canterbury இல் 931 பேரும், South Canterbury இல் 118 பேரும், தெற்கில் 625 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சகம் உறுதிபடுத்தியுள்ளது.

இதனிடையே தீவிர சிகிச்சை பிரிவில் 16 பேர் உட்பட 468 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் நாட்டின் எல்லையில் இன்று 62 கொவிட் தொற்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

தொற்றுநோய் பரவல் தொடங்கியதிலிருந்து இதுவரை நியூசிலாந்தில் அடையாளம் காணப்பட்ட தொற்றுகளின் மொத்த எண்ணிக்கை 933,464 ஆகும்.