North Island நகர் பகுதியான Carterton ஐ சேர்ந்த 63 வயது நபர் ஒருவர் தீ வைப்பு, தீவைக்க முயற்சி செய்தல், 500,000 டொலர்கள் மதிப்புள்ள தங்க கட்டிகள் மோசடி மற்றும் பல திருட்டுகள் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டார்.

Martinborough, Carterton மற்றும் Masterton ஆகிய இடங்களில் உள்ள தனியார் சொத்துக்களுக்கு அண்மையில் இடம்பெற்ற வாகனத் தீவிபத்து தொடர்பிலான விசாரணையைத் தொடர்ந்து நேற்றைய தினம் குறித்த நபரை கைது செய்ததாக Wairarapa பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த அனைத்து தீ வைப்புகளும் அருகில் உள்ள வீடுகளுக்கும் பரவும் சாத்தியம் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவங்கள் தொடர்பாக அவர்கள் வேறு யாரையும் தேடவில்லை.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட அந்த நபர் இன்று Masterton மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.