உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட் சிகரத்தை முதன்முதலில் சென்றடைந்த நியூசிலாந்தின் பிரபல ஆய்வாளரும், ஆக்லாந்தை பிறப்பிடமாகவும் கொண்ட எட்மண்ட் ஹிலாரி தனது அண்டார்டிகா பயணத்தின் போது அங்கு கொண்டு சென்ற‌ நியூசிலாந்து கொடி கிறிஸ்ட்சர்ச் தேவாலயத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

1958 ஆம் ஆண்டு வெற்றிகரமாக சிகரத்தை அடைந்து பின்னர் வீடு திரும்பிய எட் அவர்களால் வழங்கப்பட்ட 2.5 மீட்டர் 7 மீட்டர் அளவுள்ள இந்த கொடியானது 64 ஆண்டுகள் பழைமையுடன் கிறிஸ்ட்சர்ச் தேவாலயத்தில் தொங்கவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தேவாலயத்தில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்ற நிலையில் இந்த கொடி தற்போது மீட்கப்பட்டுள்ளது.

இதில் பணிபுரிந்து வரும் ஹெரிடேஜ் பணியாளர் ஜென்னி மே, கொடியை அகற்றுவது மிகவும் சுமூகமாக நடந்ததாக கூறினார்.

இந்நிலையில் மறுசீரமைப்பு மற்றும் மேம்பாடு பணிகள் முடிந்ததும் தேவாலயத்தில் மீண்டும் தொங்கவிடப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.