ஆக்லாந்து துறைமுகத்தில் பயணிகள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்காக இரண்டு மின்சார படகுகள் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக அரசாங்கம் இன்று அறிவித்தது.

ஆக்லாந்து டிரான்ஸ்போர்ட்டின் உள் மற்றும் மத்திய துறைமுக சேவைகளுக்காக 200 பேர் வரை பயணிக்கக் கூடிய இரண்டு படகுகள் 2024 ஆம் ஆண்டு கொண்டு வரப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

குறித்த படகுகளுக்கான கட்டுமான செலவில் சுமார் 75 சதவீதத்தை ஈடுகட்ட 27 மில்லியன் டாலர் நிதியுதவியை அரசாங்கம் வழங்க உள்ளது.

எரிசக்தி மற்றும் வளத்துறை அமைச்சர் மேகன் வூட்ஸ் கூறுகையில், தற்போதைய டீசல் படகுகள் நகரின் பொது போக்குவரத்து மாசுவில் 20 சதவீதம் பங்களிப்பு செய்வதாக தெரிவித்தார்.

எனவே இந்த மின்சார படகுகள் கிரீன்ஹவுஸ் வாயு வெளியேற்றத்தை வியத்தகு முறையில் குறைக்கும்.

ஒவ்வொரு மின்சார படகும் ஆண்டுதோறும் சுமார் 1000 டன் கார்பன் வெளியேற்றத்தை கட்டுப்படுத்தும் என அவர் கூறினார்.

இரண்டு படகுகளும் ஆக்லாந்து போக்குவரத்துக்கு சொந்தமானதாக இயக்கப்படும்.

இந்த இரண்டு படகுகளும் எதிர்காலத்தில் மேலும் மின்மயமாக்கலுக்கு வழி வகுக்கும் என்று போக்குவரத்து அமைப்பு கூறியது.

ஆக்லாந்து போக்குவரத்து இரண்டு படகுகளை நிர்மாணிப்பதற்கான செலவில் முக்கால் பங்கை அது செலுத்தும் என்றும் வூட் கூறினார்.

ஆக்லாந்து போக்குவரத்து போதுமான நிதியைப் பெற்றால் 2030 ஆம் ஆண்டளவில் மாசு இல்லாத பேருந்துக் குழுவைக் கொண்டிருக்கும் என்று நம்பப்படுகிறது.

இந்நிலையில்  நகரின் பயணிகள் ரயில் சேவைகள் ஏற்கனவே பெரும்பாலும் மின்சாரத்தில் இயங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.