இன்று பாராளுமன்றத்தின் ரோஜா தோட்டங்களில் கஞ்சா நாற்றுகள் வளர்ந்துள்ளதைக் கண்டறிந்துள்ளனர்.

மேலும் அந்தச் செடிகள் ஏனைய புற்களுடன் சேர்த்து அழிக்கப்பட்டதாக வளாகப் பராமரிப்பாளர் உறுதிப்படுத்தினார்.

இன்று பாராளுமன்ற மைதானத்திற்கு வந்த ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர், தக்காளி மற்றும் பழ மரங்கள் போன்ற பலவகையான விளைபொருட்கள் கடந்த மாதம் 23 நாள் ஆக்கிரமிப்பின் போது விதைக்கப்பட்டதாகக் கூறினார்.

இந்நிலையில் மேலும் சில விதைகள் எஞ்சியிருக்கக்கூடும் என்று மைதான பராமரிப்பாளர் ஒப்புக்கொண்டார்.

மேலும் "பாராளுமன்ற மைதானத்தில் பயிரிடப்பட்ட முதல் கஞ்சா" இது என்று அவர் கருதுவதாக தெரிவித்தார்.