கொவிட் கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டக்காரர்கள் வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்திற்கு மீண்டும் வருவோம் என்று உறுதியளித்துள்ள நிலையில்  இந்த முறை பாராளுமன்றம் முன் ஏற்பாடுகளுடன் தயாராக உள்ளது.

இன்று பாராளுமன்ற வளாகத்தைச் சுற்றி வேலிகள் அமைக்கப்பட்டன, வெலிங்டனுக்கு வெளியில் இருந்து கூடுதல் பொலிஸ் அதிகாரிகள் ஏற்கனவே வரவழைக்கப்பட்டுள்ளனர்.

ஆக்கிரமிப்பில் இருந்து உருவான UNITE என்ற குழு 14 நாட்கள் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது.

"வெலிங்டோனியர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்த சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருப்பதை உறுதிசெய்ய முன்கூட்டியே என்ன செய்ய வேண்டும் என்பதை காவல்துறை நிச்சயமாக கவனிக்கும் என்பதில் சந்தேகமில்லை" என்று பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன்
இன்று கூறினார்.

துணைப் பிரதமர் கிராண்ட் ராபர்ட்சன் "எத்தனை போராட்டக்காரர்கள் வருவார்கள் என்று நாங்கள் காத்திருந்து பார்ப்போம்." என தெரிவித்தார்.

இந்நிலையில் தேசியக் கட்சியின் துணைத் தலைவர் நிக்கோலா வில்லிஸும் குழப்பமடைந்துள்ளார்.

"ஆர்ப்பாட்டக்காரர்கள் மீண்டும் வருவதால் அவர்கள் என்ன லாபம் பெறுவார்கள் என்று அவர்கள் நினைக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை."

இது பாராளுமன்றத்தின் கடந்த கால எதிர்ப்பைப் போல் இருக்காது என்று நம்புகிறோம் என தெரிவித்தார்.