பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்னைக் கொலை செய்யப் போவதாக மிரட்டிய குற்றத்திற்காக நியூசிலாந்து நபருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

56 வயதான மைக்கேல் க்ரூக்ஷாங்க் என்ற நபர் 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் அரசாங்க அதிகாரிகளுக்கு 88 மின்னஞ்சல்களை அனுப்பியதாகவும், அவர்களை குற்றவாளிகள், அடிமை வியாபாரிகள் மற்றும் அரசு அனுமதித்த பயங்கரவாதிகள் என்றும் தெரிவித்துள்ளார்.

ஆனால் அவர் ஜனவரி 2020 இல் அனுப்பிய இரண்டு மின்னஞ்சல்கள் வன்முறை அச்சுறுத்தல் மூலம் ஒரு எல்லையைத் தாண்டியது.

ஒரு மின்னஞ்சலில், க்ரூக்ஷாங்க் பிரதமர் ஆர்டெர்னின் தலையை வெடிக்கச் செய்வதாக மிரட்டினார், மற்றொரு மின்னஞ்சலில், "இந்த கிரகத்திலிருந்து உங்களைத் தனிப்பட்ட முறையில் அழித்துவிடுவேன்" என்று குறிப்பிட்டிருந்ததாக The New Zealand Herald தெரிவித்துள்ளது.

இந்நிலையில் குறித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நபருக்கு நீதிமன்றம் ஒரு வருடம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.