ஆக்லாந்தில் காணாமல் போன 13 வயது சிறுமியின் நல்வாழ்வு குறித்து காவல்துறை கவலை கொண்டுள்ளது.

ஏரியா பிரிட்ஜர் என்ற குறித்த சிறுமி கடைசியாக மத்திய ஆக்லாந்தின் கிராஃப்டன் (Grafton) பகுதியில் கடந்த வியாழக்கிழமை (24) அன்று காணப்பட்டதாக காவல்துறை கூறுகிறது.

பொலிஸாரின் அறிக்கைப்படி, அவர் கடைசியாக சிவப்பு நிற ட்ராக் சூட், ஊதா நிற காலணிகள் மற்றும் கருப்பு பை அணிந்திருந்தார்.

சிறுமியை கண்டறிவதற்கான பொலிஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன, மேலும் அவரது நல்வாழ்வு குறித்து எங்களுக்கு கவலைகள் உள்ளன" என்று பொலிஸார் ஒரு அறிக்கையில் தெரிவித்தனர்.

இந்நிலையில் குறித்த சிறுமியை பார்க்கும் எவரும் 111 என்ற எண்ணில் காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இல்லையெனில், அவள் இருக்கும் இடம் குறித்த தகவல் தெரிந்தவர்கள், 105 என்ற எண்ணில் காவல்துறையை தொடர்பு கொண்டு 220324/9994 என்ற கோப்பு எண்ணை மேற்கோள் காட்டி தகவல்களை வழங்குமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.