மானுகாவ் ஹெட்ஸ் (Manukau Heads )அருகே Orua Bay இல் சடலம்  ஒன்று மீட்கப்பட்ட நிலையில் குறித்த சடலம்

காணாமல் போன Weymouth ஐ சேர்ந்த நிக் பால் என்ற நபரின் சடலம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வார இறுதியில் Orua Bay கடற்கரையில் ஒரு சடலம் இருந்ததை அடுத்து தங்களுக்கு அறிவிக்கப்பட்டதாக பொலிஸார் ஒரு அறிக்கையில் தெரிவித்தனர்.

பின்னர், அந்த சடலம் காணாமல் போன 46 வயதுடைய Weymouth ஐ சேர்ந்த நிக் பால் என பொலிசார் தற்போது அடையாளம் கண்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த மரணம் தொடர்பில் மரண விசாரணை அதிகாரிக்கு பரிந்துரைக்கப்படும் என‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.