நியூசிலாந்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ள ரஷ்ய அரசு அதிகாரிகள் மற்றும் பிறரை ஜசிந்தா ஆர்டெர்ன் மற்றும் வெளியுறவு மந்திரி நனையா மஹுதா ஆகியோர் பெயரிட்டுள்ளனர்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் கொடூரமான ஆக்கிரமிப்பை அடுத்து நியூசிலாந்து அரசு இந்த அதிரடி தீர்மானத்தை எடுத்துள்ளது.

இந்நிலையில் பெப்ரவரி மாதம் பிற்பகுதியில் தீர்மானிக்கப்பட்ட பயணத் தடைக்கு உட்பட்டவர்களை பொதுவில் பெயரிடும் அரிய நடவடிக்கையை அரசாங்கம் எடுத்துள்ளது.

இந்தப் பட்டியலில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் முதலிடத்தில் உள்ளார்.

மேலும் அந்நாட்டு பிரதமர் விளாடிமிரோவிச் மிஷுஸ்டின், ரஷ்ய கூட்டமைப்பின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி விக்டோரோவிச் லாவ்ரோவ்,
ரஷ்ய கூட்டமைப்பின் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு உட்பட சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ரஷ்ய அதிகாரிகள் நியூசிலாந்திற்குள் நுழைய அரசு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.