கடந்த ஒரு மாதமாக பாராளுமன்ற வளாகத்தை ஆக்கிரமித்த போராட்டக்காரர்களில் 28 பேருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.

ஒரு அறிக்கையில் சுகாதார அமைச்சகம் 11 மாவட்ட சுகாதார வாரியங்களில் 28 கொவிட் -19 தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில் வைரராபா, வைட்மாடா, வைகாடோ, தரானகி, தெற்கு, MidCentral, தைராவிதி, Hutt Valley, கவுண்டிஸ் மானுகாவ், Capital and Coast மற்றும் கேன்டர்பரி ஆகியவை அடங்கும் என கூறியுள்ளது.

"இந்த நபர்கள் போரட்டத்தில் கலந்து கொண்டவர்களாக கருதப்படுகிறார்கள்‌ என அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் 23 நாள் ஆக்கிரமிப்பில் இருந்த அனைவரையும் பரிசோதனை செய்து தடுப்பூசி போடுமாறு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.