இந்த வார இறுதியில் ஆக்லாந்து, ஆக்லாந்தின் வடக்கு மற்றும் கேன்டர்பரி ஆகிய இடங்களில் நடந்த வெவ்வேறு விபத்துகளில் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.

இன்று காலை ஆக்லாந்தின் வடக்கே Mangawhai அருகே Te Arai என்ற இடத்தில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சம்பவ இடத்தில் அவசர சேவைகள் பணிபுரியும் போது Ocean View சாலை மூடப்பட்டது.

ஒரு வாகனம் மட்டுமே விபத்தில் சிக்கியதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும் ஆக்லாந்தில் நேற்று காலை Royal Oak பகுதியில் உள்ள Manukau சாலையில் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் டிரக் மோதியதில் உயிரிழந்தார்.

நேற்று பிற்பகல் கேன்டர்பரியில் உள்ள Ashburton புறநகர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Elgin கடற்கரை சாலையில் கிழக்கு பகுதியில் இந்த விபத்து நடந்தமை குறிப்பிடத்தக்கது.