நேற்றிரவு ஹமில்டனின் புறநகர்ப் பகுதியான Huntington இல் உள்ள ஒரு வீட்டில் ஒருவர் இறந்ததை அடுத்து, காவல்துறையினர் கொலை விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

இரவு 7 மணிக்குப் பிறகு Borman சாலையில் உள்ள ஒரு வீட்டில்  நடந்த குறித்த சம்பவத்திற்கு அவசர சேவைகள் அழைக்கப்பட்டதாக துப்பறியும் மூத்த சார்ஜென்ட் ஆண்ட்ரூ சாண்டர்ஸ் கூறினார்.

அவசர சேவைகள் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது பலத்த காயங்களுடன் ஒருவரைக் கண்டனர்.

உடனடி மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்ட போதிலும் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக, சாண்டர்ஸ் கூறினார்.

இந்நிலையில் குறித்த வீட்டில் இருந்த மற்றொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த மரணம் தொடர்பாக வேறு யாரையும் தேடவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று சம்பவ இடத்தில் தடயவியல் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதுடன், பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் திங்கட்கிழமை பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தகவல் தெரிந்தவர்கள் 105ல் தொடர்பு கொண்டு 220305/5348 என்ற கோப்பு எண்ணை மேற்கோள் காட்டி தகவல்களை வழங்குமாறு காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.