இன்று நியூசிலாந்தில் 18,833 கொவிட் தொற்றுகள் சமூகத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இன்றைய சமூக தொற்றுகளில் ஆக்லாந்தில் 9789 பேரும், வைகாடோவில் 1575 பேரும், Bay of Plenty இல் 1222 பேரும், Hawke's Bay இல் 168 பேரும், Mid Central இல் 417 பேரும், நோர்த்லேண்டில் 483 பேரும், தரணகியில் 264 பேரும், Capital and Coast இல் 1308 பேரும், Wairarapa வில் 94 பேரும், Nelson Marlborough வில் 258 பேரும், Canterbury இல் 1170 பேரும், South Canterbury 57 பேரும், தெற்கில் 558 பேரும், Lakes இல் 459 பேரும், Hutt Valley வில் 576 பேரும், Whanganui இல் 95 பேரும், West coast இல் 17 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சகம் உறுதிபடுத்தியுள்ளது.

இதனிடையே தீவிர சிகிச்சை பிரிவில் 10 பேர் உட்பட 597 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் கொவிட் தொற்றாளர்கள் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதில் மூன்று பேர் ஆண்களும், இரண்டு பேர் பெண்களும் ஆவர்.

நாட்டின் எல்லையில் 07 கொவிட் தொற்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

தொற்றுநோய் பரவல் தொடங்கியதிலிருந்து இதுவரை நியூசிலாந்தில் அடையாளம் காணப்பட்ட தொற்றுகளின் மொத்த எண்ணிக்கை 206,827 ஆகும்

இதனிடையே நாட்டில் நேற்றையதினம் 255 முதல் டோஸ்கள், 725 இரண்டாவது டோஸ்கள் மற்றும் 16,248 பூஸ்டர் டோஸ்கள் வழங்கப்பட்டன.

மேலும் நாட்டில் நேற்றையதினம் குழந்தைகளுக்கான கொவிட் தடுப்பூசியின் 1243 முதல் டோஸ் மற்றும் 241 இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டன.