ஆக்லாந்தில் இன்று ட்ரக் ஒன்றும் சைக்கிளும் மோதுண்டு ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று காலை 11:25 மணியளவில் Royal Oak, Manukau சாலையில் ஏற்பட்ட இந்த விபத்து குறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த விபத்தில் சைக்கிள் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்தில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து மனுகாவ் சாலை இப்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.