கொவிட் தனிமைப்படுத்தல் விதிகளை தளர்த்திக் கொண்டு வீடு திரும்பிய நியூசிலாந்தர்களின் முதல் குழுவிற்கு இன்று மதியம் ஆக்லாந்து விமான நிலையத்தில் கிவி வரவேற்பு அளிக்கப்பட்டது.

எமிரேட்ஸ் விமானத்தில் பயணிக்கும் நியூசிலாந்தர்கள் நிர்வகிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் அல்லது சுய தனிமைப்படுத்தலுக்கு செல்ல வேண்டியதில்லை.

இந்நிலையில் இன்று ஆக்லாந்து விமான நிலையத்தில் தரையிறங்கிய உறவுகளுக்கு ஹாக்கா நடத்தப்பட்டு (மவோரி நடனம்) , அன்பளிப்பு பொதிகளும் வழங்கப்பட்டு அவர்களுக்கு அன்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இரண்டு வருடங்களின் பின்னர் சந்தித்துக் கொண்ட‌ உறவுகள் கண்ணீருடனும் அளவற்ற மகிழ்ச்சியுடனும் தங்கள் அன்பை பகிர்ந்து கொண்டதை காணக்கூடியதாக இருந்தது.

ஆக்லாந்து விமான நிலையம்,
பயணிகள் வருகை தரும் பகுதியில் நிகழ்ச்சி நடத்த  ஹக்கா தி லெஜண்ட் குழுவினரை ஏற்பாடு செய்துள்ளது மற்றும் கிவி சின்னமான 7 உணவுப் பொருட்கள் நிரப்பப்பட்ட சிறிய பொதிகளை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுமார் 900 நியூசிலாந்தர்கள் இன்று MIQ அல்லது சுய-தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட மாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே அடுத்த வாரத்தில் 30க்கும் மேற்பட்ட வெளிநாட்டு விமானங்கள் ஆக்லாந்து விமான நிலையத்தை நோக்கி வர உள்ளன.