இன்று நியூசிலாந்தில் 22,527 கொவிட் தொற்றுகள் சமூகத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே தீவிர சிகிச்சை பிரிவில் 11 பேர் உட்பட 567 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நிர்வகிக்கப்பட்ட தனிமைப்படுத்தலில் 08 கொவிட் தொற்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதனிடையே நாட்டில் நேற்றையதினம் 315 முதல் டோஸ்கள், 743 இரண்டாவது டோஸ்கள் மற்றும் 15,195 பூஸ்டர் டோஸ்கள் வழங்கப்பட்டன.

மேலும் நாட்டில் நேற்றையதினம் குழந்தைகளுக்கான கொவிட் தடுப்பூசியின் 1150 முதல் டோஸ் மற்றும் 223 இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டன.

தொற்றுநோய் பரவல் தொடங்கியதிலிருந்து இதுவரை நியூசிலாந்தில் அடையாளம் காணப்பட்ட தொற்றுகளின் மொத்த எண்ணிக்கை 187,964 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.