பாராளுமன்றத்தைச் சுற்றியுள்ள சாலைகளைத் தடுக்கும் தடுப்புகளை அகற்றும் பணிகளை காவல்துறை தொடங்கவுள்ளது.

ஆனால் வெலிங்டனின் கீழ் மோல்ஸ்வொர்த் தெரு (lower Molesworth Street) சுற்றி வளைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டாத்தில் எதிர்ப்பாளர்களின் மூன்று வார ஆக்கிரமிப்பை அடுத்து தற்போது Hill மற்றும் Aitken தெருக்கள் சுத்தம் செய்யப்பட்டுள்ள நிலையில்
இன்று அணுகல் மீட்டமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மெட்லிங்க், பஸ் டிப்போவின் நிலையை மதிப்பீடு செய்து, அது செயல்படுவதற்கு முன், அப்பகுதியை நன்கு சுத்தம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

"ஞாயிற்றுக்கிழமை காலை சுத்தம் செய்யும் பணிகள் நிறைவடையும் என்று நாங்கள் நம்புகிறோம், ஆனால் காலவரை இன்னும் முடிவு செய்யப்படவில்லை."

நேற்று இரவில் அப்பகுதியில் பிரச்சனைகள் எதுவும் இல்லை, ஆனால் இன்று மற்றும் வார இறுதி முழுவதும் மத்திய நகரத்தில் பொலிஸ் பிரசன்னம் இருக்கும் என்று ஒரு பொலிஸ் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

மஹாங்கா விரிகுடாவிற்கும் வைனுயோமாடாவிற்கும் இடையில் பயணிக்கும் மக்கள் மற்றும் வாகனங்களல அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

இதனிடையே பாராளுமன்ற போராட்டம் தொடர்பில் 102 பேர்‌ இதுவரை கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.