இன்று நியூசிலாந்தில் 23,183 கொவிட் தொற்றுகள் சமூகத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இன்றைய சமூக தொற்றுகளில் ஆக்லாந்தில் 13237 பேரும், வைகாடோவில் 1870 பேரும், Bay of Plenty இல் 1332 பேரும், Tairawhiti இல் 134 பேரும், Hawke's Bay இல் 315 பேரும், Mid Central இல் 381 பேரும், நோர்த்லேண்டில் 520 பேரும், தரணகியில் 289 பேரும், Capital and Coast இல் 1487 பேரும், Wairarapa வில் 94 பேரும், Nelson Marlborough வில் 271 பேரும், Canterbury இல் 1294 பேரும், South Canterbury 53 பேரும், தெற்கில் 615 பேரும், Lakes இல் 537 பேரும், Hutt Valley வில் 642 பேரும், Whanganui இல் 79 பேரும், West coast இல் 16 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சகம் உறுதிபடுத்தியுள்ளது.

இதனிடையே தீவிர சிகிச்சை பிரிவில் 07 பேர் உட்பட 503 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்றைய ஊடக சந்திப்பில் பேசிய சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் ஆஷ்லே ப்ளூம்ஃபீல்ட் பெப்ரவரி 21 முதல் 27 ஆம் திகதி வரை நியூசிலாந்து சனத்தொகையில் சுமார் 1 சதவீதம் பேர் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

நாட்டின் எல்லையில் 11 கொவிட் தொற்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதனிடையே நாட்டில் நேற்றையதினம்
391 முதல் டோஸ்கள், 869 இரண்டாவது டோஸ்கள் மற்றும் 17,963 பூஸ்டர் டோஸ்கள் வழங்கப்பட்டன.

மேலும் நாட்டில் நேற்றையதினம் குழந்தைகளுக்கான கொவிட் தடுப்பூசியின் 1391 முதல் டோஸ் மற்றும் 248 இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டன.

தொற்றுநோய் பரவல் தொடங்கியதிலிருந்து இதுவரை நியூசிலாந்தில் அடையாளம் காணப்பட்ட தொற்றுகளின் மொத்த எண்ணிக்கை 165,440 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.