கொவிட் கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டக்காரர்கள் பாராளுமன்ற வளாகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள தெருக்களின் சில பகுதிகளை ஆக்கிரமித்த 23 ஆம் நாளான நேற்று வன்முறை ஏற்பட்டது.

பொலிஸாருக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது, இந்நிலையில் 40 பொலிசார் காயமடைந்தனர், எட்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் மற்றும் 89 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் பிரதம மந்திரி ஜசிந்தா ஆர்டெர்ன் நியூசிலாந்தின் பாராளுமன்ற வளாகத்தை "ஒரு குப்பை மேடு" என்று ஒப்பிட்டார்.

இன்று பாராளுமன்ற வளாகம் எப்படி இருக்கிறது என்று ஆர்டெர்ன் கூறினார், இது "பாராளுமன்றத்தில் நீங்கள் ஒருபோதும் எதிர்பார்க்காத காட்சி" என்று கூறினார்.

"இது இன்று ஒரு குப்பைக் கிடங்கை ஒத்திருக்கிறது."

நேற்றைய தினம் கூடாரங்கள் தீப்பிடித்து எரிந்தன, தீயை ஏற்படுத்த எரிவாயு குப்பிகள் உள்ளிட்ட பொருட்கள் வீசப்பட்டன.

இந்த வன்முறையின் போது 600 பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர், 50 தீயணைப்பு வீரர்கள் மற்றும் வெலிங்டன் இலவச ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

நியூசிலாந்து காவல்துறைக்கு பிரதமர் ஆடர்ன் நன்றி தெரிவித்தார்.

"உங்கள் ஒவ்வொருவருக்கும், நாங்கள் நன்றி கூறுகிறோம். இந்த சம்பவத்தில் நீங்கள் பெரும் ஆபத்தில் இருந்தீர்கள். உங்களில் பலர் தாக்கப்பட்டனர், சிலர் காயமடைந்தனர். ஆனால் மற்றவர்களைக் கவனிப்பதற்காக உங்கள் தனிப்பட்ட பாதுகாப்பை ஒதுக்கி வைத்தீர்கள்." என அவர் கூறினார்.

மேலும் பிரதமர் ஆர்டெர்ன் வெலிங்டோனியர்களிடம் மன்னிப்புக் கேட்டார், அவர்களின் "பாதுகாப்பு உணர்வும் நம்பிக்கையும் மீட்டெடுக்கப்பட்டதாக" தான் நம்புவதாகக் கூறினார்.