இன்று நியூசிலாந்தில் 19,566 கொவிட் தொற்றுகள் சமூகத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இன்றைய சமூக தொற்றுகளில் ஆக்லாந்தில் 12,530 பேரும், வைகாடோவில் 1812 பேரும், Bay of Plenty இல் 1185 பேரும், Tairawhiti இல் 88 பேரும், Hawke's Bay இல் 168 பேரும், Mid Central இல் 260 பேரும், நோர்த்லேண்டில் 329 பேரும், தரணகியில் 165 பேரும், Capital and Coast இல் 691 பேரும், Wairarapa வில் 42 பேரும், Nelson Marlborough வில் 196 பேரும், Canterbury இல் 740 பேரும், South Canterbury 37 பேரும், தெற்கில் 529 பேரும், Lakes இல் 376 பேரும், Hutt Valley வில் 355 பேரும், Whanganui இல் 45 பேரும், West coast இல் 17 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சகம் உறுதிபடுத்தியுள்ளது.

இதனிடையே தீவிர சிகிச்சை பிரிவில் 09 பேர் உட்பட 373 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டின் எல்லையில் 22 கொவிட் தொற்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதனிடையே நாட்டில் நேற்றையதினம் 388 முதல் டோஸ்கள், 733 இரண்டாவது டோஸ்கள் மற்றும் 23,465 பூஸ்டர் டோஸ்கள் வழங்கப்பட்டன.

மேலும் நாட்டில் நேற்றையதினம் குழந்தைகளுக்கான கொவிட் தடுப்பூசியின் 1452 முதல் டோஸ் மற்றும் 231 இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டன.