நேற்று முதல் பாராளுமன்ற மைதானத்தில் கொவிட் -19 கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் தாக்குதல் ஆயுதம் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்றிரவு சுமார் 200 பேர் வரை தங்கியிருந்த நிலையில், நாடாளுமன்றத்தில் கூடியிருந்த எதிர்ப்பாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்று காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முதல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டவர்களில் பிணையை மீறிய குற்றத்திற்காக 33 வயதுடைய நபர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டு வெலிங்டன் மாவட்ட நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.

55 வயதுடைய நபர் ஒருவர் நேற்று இரவு வேண்டுமென்றே அத்துமீறி நுழைந்ததாக குற்றம் சாட்டப்பட்டு வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.

மேலும் தாக்குதல் ஆயுதம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 53 வயதுடைய நபர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டு இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.

பிணையை மீறிய குற்றச்சாட்டில் 33 வயதுடைய நபர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டு நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

இதனிடையே இன்று Piptea Marae இற்கு வெளியே சுமார் 20 எதிர்ப்பாளர்கள் கூடியிருந்ததாக காவல்துறை கூறியது, ஆனால் பொலிஸார் அவர்களுடன் பேசிய பிறகு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றமை குறிப்பிடத்தக்கது.