பெராதெனியா பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறை முன்னாள் பேராசிரியர் சிசிரா பின்னாவல அவர்கள் இன்று (04) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்தார்.

சமூக மற்றும் அரசியல் துறைகளில் நடைமுறை மற்றும் தத்துவார்த்த முன்னோடியாக விளங்கும் இவர், எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் புலனாய்வு மையத்துடன் இணைந்து பணியாற்றுவார். அவர் ஒரு மூத்த எழுத்தாளர் மற்றும் அடையாள அரசியல் மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் இலங்கை எனும் நூலின்ஆசிரியரும் ஆவார்.

கூடுதலாக, 'கோவிட் 19 பிந்தைய கால கட்டத்தில் இலங்கைக்கான புதிய பார்வை' புத்தகத்திற்கு முக்கிய பங்கு வகித்தவர், மேலும் ஏராளமான சமூக மற்றும் அரசியல் கட்டுரைகளை எழுதிய அறிஞராகவும் இருக்கிறார்.