வெள்ளிக்கிழமை டன்னீடன் இடம்பெற்ற ஒரு பெரிய மாணவர் விருந்துக்கு அழைக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளிடம் மாணவர்கள் ஒழுங்கற்ற முறையில் நடந்து கொண்டனர்.

காசில் தெருவில்  நடந்த குறித்த நிகழ்வில் சுமார் 100 பேர் கலந்து கொண்டனர், இதில் பலர் சமீபத்தில் கொவிட் தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என மூத்த சார்ஜென்ட் அந்தோணி பாண்ட் கூறினார்.

"இந்த மாணவர்கள் சுய-தனிமை விதிகளை கடைபிடிக்காதது ஏமாற்றமளிக்கிறது, அவர்கள் வீட்டில் இருந்திருக்க வேண்டும்." என அவர் தெரிவித்தார்.

இரவு 10.30 மணியளவில் பொலிஸார் குறித்த விருந்து உபசார நிகழ்வை முடக்கினர்.

இந்நிலையில் இரு ஆண்களை பொலிஸார் கைது செய்தனர்," என்று பாண்ட் கூறினார்.

"19 வயதான ஆண் ஒருவர்  அவதூறான பேச்சு மற்றும் ஒழுங்கீனமான நடத்தைக்காக கைது செய்யப்பட்டார்

"இந்த ஆண் கைது செய்யப்பட்டபோது, ​​​​சில ஆண்கள் பொலிஸாரிடம் வந்து இருமிக் காட்டி கொவிட் பாசிட்டிவ் என்று கூறினர், பொலிஸார் அவர்களை பிடிக்க முயன்ற நிலையில் அவர்கள் ஓடிவிட்டனர், சிசிடிவி மூலம் அவர்களை அடையாளம் காணவும், இது குறித்து அவர்களிடம் பேசவும் தொடர் விசாரணைகள் தொடர்கின்றன.

இந்நிலையில் "காவல்துறை அதிகாரியின் தொப்பியைத் திருட முயன்ற 18 வயது ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.