இன்று நியூசிலாந்தில் 14,633 கொவிட் தொற்றுகள் சமூகத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இன்றைய சமூக தொற்றுகளில் ஆக்லாந்தில் 9305 பேரும், வைகாடோவில் 1530 பேரும், Bay of Plenty இல் 762 பேரும், Tairawhiti இல் 60 பேரும், Hawke's Bay இல் 138 பேரும், Mid Central இல் 175 பேரும், நோர்த்லேண்டில் 225 பேரும், தரணகியில் 67 பேரும், Capital and Coast இல் 604 பேரும், Wairarapa வில் 45 பேரும், Nelson Marlborough வில் 178 பேரும், Canterbury இல் 573 பேரும், South Canterbury 24 பேரும், தெற்கில் 372 பேரும், Lakes இல் 265 பேரும், Hutt Valley வில் 281 பேரும், Whanganui இல் 30 பேரும், West coast இல் 03 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சகம் உறுதிபடுத்தியுள்ளது.

இதனிடையே தீவிர சிகிச்சை பிரிவில் ஐவர் உட்பட 344 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டின் எல்லையில் 23 கொவிட் தொற்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

மேலும் பாராளுமன்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களில் 17 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

இதனிடையே நாட்டில் நேற்றையதினம்
176 முதல் டோஸ்கள், 423 இரண்டாவது டோஸ்கள் மற்றும் 13,707 பூஸ்டர் டோஸ்கள் வழங்கப்பட்டன.

மேலும் நாட்டில் நேற்றையதினம் குழந்தைகளுக்கான கொவிட் தடுப்பூசியின் 117 முதல் டோஸ் மற்றும் 197 இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டன.