இன்று நியூசிலாந்தில் 14,941 கொவிட் தொற்றுகள் சமூகத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இன்றைய சமூக தொற்றுகளில் ஆக்லாந்தில் 9046 பேரும், வைகாடோவில் 1519 பேரும், Bay of Plenty இல் 812 பேரும், Tairawhiti இல் 69 பேரும், Hawke's Bay இல் 136 பேரும், Mid Central இல் 142 பேரும், நோர்த்லேண்டில் 225 பேரும், தரணகியில் 100 பேரும், Capital and Coast இல் 516 பேரும், Wairarapa வில் 45 பேரும், Nelson Marlborough வில் 158 பேரும், Canterbury இல் 981 பேரும், South Canterbury 44 பேரும், தெற்கில் 532 பேரும், Lakes இல் 208 பேரும், Hutt Valley வில் 373 பேரும், Whanganui இல் 19 பேரும், West coast இல் 09 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சகம் உறுதிபடுத்தியுள்ளது.

இதனிடையே தீவிர சிகிச்சை பிரிவில் ஐவர் உட்பட 305 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொற்றுநோய் பரவல் தொடங்கியதிலிருந்து இதுவரை நியூசிலாந்தில் அடையாளம் காணப்பட்ட தொற்றுகளின் மொத்த எண்ணிக்கை 85,667 ஆகும்.

இதனிடையே நாட்டில் நேற்றையதினம் 353 முதல் டோஸ்கள், 863 இரண்டாவது டோஸ்கள் மற்றும் 28,836 பூஸ்டர் டோஸ்கள் வழங்கப்பட்டன.

மேலும் நாட்டில் நேற்றையதினம் 2892 குழந்தைகளுக்கான கொவிட் தடுப்பூசி முதல் டோஸ் மற்றும் 370 இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டன.