இன்று நியூசிலாந்தில் 12,011 கொவிட் தொற்றுகள் சமூகத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது நேற்றைய தினம் அறிவிக்கப்பட்ட தொற்றுகளின் எண்ணிக்கையின் இரு மடங்காகும்.

இதனிடையே கொவிட் தொற்றால் ஐவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நியூசிலாந்தின் இதுவரை கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் North Shore மருத்துவமனையில் இருவரும், வைகாடோவில் இருவரும், Tauranga ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே தீவிர சிகிச்சை பிரிவில் மூவர் உட்பட 237 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டின் எல்லையில் 19 கொவிட் தொற்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

தொற்றுநோய் பரவல் தொடங்கியதிலிருந்து இதுவரை நியூசிலாந்தில் அடையாளம் காணப்பட்ட தொற்றுகளின் மொத்த எண்ணிக்கை 39,413 ஆகும்.

இதனிடையே நாட்டில் நேற்றையதினம் 523 முதல் டோஸ்கள், 1101 இரண்டாவது டோஸ்கள் மற்றும் 25,461 பூஸ்டர் டோஸ்கள் வழங்கப்பட்டன.

மேலும் நாட்டில் நேற்றையதினம் 1657 குழந்தைகளுக்கான கொவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டன.