நாடாளுமன்றத்தில் நடந்த போராட்டம், கொவிட் -19 தொற்றுடன் தொடர்புடைய நிகழ்வாக சுகாதார அமைச்சகத்தின் இணையதள பக்கத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

பெப்ரவரி 20 சனிக்கிழமை காலை 11.55 மணி முதல் இரவு 11 மணி வரையிலும், பெப்ரவரி 21 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி முதல் இரவு 11.59 மணி வரையிலும் இந்த போராட்டம் கொவிட் தொற்றுடன் நெருங்கிய தொடர்பு நிகழ்வாக பட்டியலிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த இடத்தில் இருந்த மக்கள் ஏழு நாட்களுக்கு தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளவும்,ஐந்தாவது நாளில் கொவிட் பரிசோதனை செய்யவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் அவர்கள் அறிகுறிகளை 10 நாட்களுக்கு கண்காணிக்க வேண்டும் மற்றும் அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் மீண்டும் பரிசோதனை செய்ய வேண்டும்.

இதனிடையே பாராளுமன்றத்தை ஒட்டிய ஹில் ஸ்ட்ரீட்டில் நேற்றிரவு பொலிஸாருக்கும் குறைந்தது 100 ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.