கொகெயின் இறக்குமதி செய்யும் குற்றவியல் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது பல புதிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பரில் காவல்துறை மற்றும் சுங்கத்துறையின் கூட்டு நடவடிக்கையில் பல மில்லியன் டொலர்கள் மதிப்பிலான A வகை போதைப்பொருள் சுமார் 50 கிலோ கைப்பற்றப்பட்டது.

ஆக்லாந்து மற்றும் கேன்டர்பரி முழுவதும் நிறைவேற்றப்பட்ட தொடர்ச்சியான தேடுதல் வாரண்டுகளைத் தொடர்ந்து ஆறு கொலம்பிய பிரஜைகள் மற்றும் ஒரு அர்ஜென்டினா பிரஜைக உட்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர்.

சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என கூறப்படும் சிலர் பண்ணைகளில் வேலை செய்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில் பணமோசடி, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களில் ஈடுபட்டது மற்றும் கொகெயின் இறக்குமதி மற்றும் விநியோகம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் கடந்த ஆண்டு அவர்கள் முதலில் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.

இதனிடையே சுமத்தப்பட்ட புதிய குற்றச்சாட்டுகள் தொடர்பில்  விவரங்கள் இன்னும் அறியப்படவில்லை ஆனால் மொத்தம் சுமார் 30 குற்றச்சாட்டுகளை அவர்கள் தற்போது எதிர்கொள்வதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட ஒன்பது பேரும் அடுத்த மாதம் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள்‌ என‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.