Dunedin Tamil Society சமூகத்தை சேர்ந்த இளைஞர் சௌரப்.

இவர் கிரிக்கெட் விளையாடுவதையும் DTS இன் அனைத்து சமூக நிகழ்வுகளிலும் உதவுவதையும் விரும்பும் ஒரு சுறுசுறுப்பான உறுப்பினர்.

மேலும் இவர் அரசன் சூப்பர் கிங்ஸ் அணி Southland இன் மிகச் சிறந்த விளையாட்டு வீரரும் ஆவார்.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் கிறிஸ்ட்சர்சில் இடம்பெற்ற Inter community Cricket and Family fun day நிகழ்வில் அரசன் சூப்பர் கிங்ஸ் மற்றும் PAKNZ அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில் சௌரப் அரசன் சூப்பர் கிங்ஸ் அணியில் மிகச் சிறப்பாக விளையாடி தனது திறமையை வெளிப்படுத்தியவர்.

குறித்த இளைஞர் புற்றுநோய் வளர்ச்சியை அகற்ற அறுவை சிகிச்சை செய்து வருகிறார்.

மேலும் அவரது குடும்பத்தினர் அனைவரும் இந்தியாவில் உள்ளனர்.

இந்நிலையில் இந்த சிகிச்சை சௌரப் 8-9 மாதங்கள் வேலை செய்வதைத் தடுக்கும்.

Dunedin Tamil Society (DTS) என்பது டன்னீடனில் உள்ள தமிழ் பேசும் சமூகத்தினரிடையே புரிதல், நட்பு மற்றும் நல்லெண்ணத்தை வளர்ப்பதற்கான ஒரு சமூக அமைப்பாகும்.

இந்நிலையில் டன்னீடன் தமிழ்ச் சங்கம் சார்பாக, சௌரப் குணமடைந்து வரும் காலத்தில் அவரது வாழ்க்கைக்கு ஆதரவளிக்க நிதி உதவி கோரப்படுகிறது.

குறித்த நிதி சௌரப்பின் வாழ்க்கைச் செலவுகள், அவர் குணமடையும் காலத்தில் தங்குமிடம், உணவு மற்றும் மருத்துவச் செலவுகள் ஆகியவற்றிற்கு உதவும்.

இந்நிலையில் சௌரப்பிற்கு உதவிக்கரம் நீட்ட விரும்புபவர்கள் Give a little பக்கத்தில் உங்களால் இயன்ற உதவியை செய்யலாம்.

Give a little page : https://givealittle.co.nz/cause/let-us-support-shourabh?fbclid=IwAR3vUzQqMGy5SPFOwHgCuuNbFvwAj5inDT101FQlvBSg1qnzakVmYeaXdoQ