Waihaha, Taupō வில் இன்று இடம்பெற்ற கடுமையான விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மற்றொரு நபர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பொலிஸார் கூறுகின்றனர்.

இந்த விபத்து மதியம் 12:50 மணியளவில் மேற்கு வளைகுடா சாலையில் நிகழ்ந்துள்ளது.

விபத்தை அடுத்து சாலை மூடப்பட்ட நிலையில் தற்போது சாலை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

விபத்துக்கான சூழ்நிலைகள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.