இன்று நியூசிலாந்தில் 3297 கொவிட் தொற்றுகள் சமூகத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இன்றைய சமூக தொற்றுகளில் ஆக்லாந்தில் 1729 பேரும், வைகாடோவில் 297 பேரும், Bay of Plenty இல் 157 பேரும், Tairawhiti இல் 16 பேரும், Hawke's Bay இல் 18 பேரும், Mid Central இல் 56 பேரும், நோர்த்லேண்டில் 40 பேரும், தரணகியில் 30 பேரும், Capital and Coast இல் 123 பேரும், Wairarapa வில் 16 பேரும், Nelson Marlborough வில் 85 பேரும், Canterbury இல் 176 பேரும், South Canterbury 07 பேரும், தெற்கில் 455 பேரும், Lakes இல் 54 பேரும், Hutt Valley வில் 28 பேரும், Whanganui இல் 05 பேரும், West coast இல் 03 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சகம் உறுதிபடுத்தியுள்ளது.

இதனிடையே தீவிர சிகிச்சை பிரிவில் ஒருவர் உட்பட 179 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டின் எல்லையில் 14 கொவிட் தொற்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

தொற்றுநோய் பரவல் தொடங்கியதிலிருந்து இதுவரை நியூசிலாந்தில் அடையாளம் காணப்பட்ட தொற்றுகளின் மொத்த எண்ணிக்கை 38,951 ஆகும்.

இதனிடையே நாட்டில் நேற்றையதினம்
566 முதல் டோஸ்கள், 1239 இரண்டாவது டோஸ்கள் மற்றும் 25,367 பூஸ்டர் டோஸ்கள் வழங்கப்பட்டன.

மேலும் நாட்டில் நேற்றையதினம் 1368 குழந்தைகளுக்கான கொவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டன.