ஞாயிற்றுக்கிழமை இரவு 11.59 மணிக்குப் பிறகு நியூசிலாந்திற்கு வரும் பயணிகள், அவர்களின் பாதுகாப்பிற்கான மூன்று ரேபிட் ஆன்டிஜென் சோதனைகள் (RATகள்), தகவல் மற்றும் ஆலோசனைகள் அடங்கிய தொகுப்பைப் பெறுவார்கள்.

மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட வசதிக்கு செல்ல வேண்டியதில்லை மாறாக அவர்கள் தங்கள் வீடுகளில் சுயமாக தனிமைப்படுத்தப்பட வேண்டும்.

இது அரசாங்கத்தின் எல்லையை மீண்டும் திறக்கும் திட்டத்தின் முதல் கட்டமாகும்.

பிரதம மந்திரி ஜசிந்தா ஆர்டெர்ன் இது ‘மிகவும் உற்சாகமான அனுபவமாக இருக்கும்’ என்று ஒப்புக்கொண்டார்.

நாட்டின் எல்லையை திறக்கும் இரண்டு கட்டங்களில் முதற்கட்டமாக நியூசிலாந்தர்கள் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்து வரும் பிற பயணிகள் இந்த நாட்டிற்குள் வந்து நிர்வகிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் அல்லது தனிமைப்படுத்தல் தேவையின்றி வீட்டிற்குச் செல்ல அனுமதிக்கப்படும்.

இருப்பினும் அவர்கள் அனைவரும் முழுமையாக தடுப்பூசி பெற்று இருப்பது அவசியம்.

இரண்டாவது கட்டமானது, மார்ச் 13, 2022 முதல் நடைமுறைக்கு வரும்.

இதன்படி உலகில் எங்கிருந்தும் செல்லுபடியாகும் விசா உள்ள எவரும் நியூசிலாந்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுவர்.

வேலைக்கு வருபவர்கள், விடுமுறையை அனுபவிப்பது அல்லது தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களைப் பார்க்க வருபவர்கள் ஆகியோர் இதில் அடங்குவர்.

மேலும் தடுப்பூசி போடாத பயணிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

நியூசிலாந்திற்கு வரும் பயணிகள், சம்பந்தப்பட்ட அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக விமான நிலையத்தில் மூன்று RATகள், தகவல் மற்றும் ஆலோசனைகள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும்.  இந்த அமைப்பு காலப்போக்கில் மாற்றம் பெறும் என பிரதமர் ஆர்டெர்ன் கூறினார்.

மேலும் சுய தனிமைக் காலத்தைக் குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த நிபுணர் ஆலோசனைகள் சரியான நேரத்தில் பெறப்படும் என்று அவர் கூறினார்.

தடுப்பூசி போடப்படாத பயணிகள் MIQ க்கு செல்ல வேண்டும் என்றும், வீட்டில் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள முடியாதவர்களுக்கு தொடர்ந்து தனிமைப்படுத்தல் வசதிகள் இருக்கும் என்றும் கூறினார்.

தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கான சுய-தனிமைப்படுத்தலுக்கான தேவை எதிர்காலத்தில் அகற்றப்படும் என்றும் பிரதமர் ஜெசிந்தா ஆடர்ன் மேலும் தெரிவித்தார்.

Thanks for the News : Indian Newslink