நியூசிலாந்தின் இரண்டாவது பெரிய நகரமான கிறிஸ்ட்சர்சில் 20 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 185 உயிர்களைக் கொன்ற அழிவுகரமான பூகம்பத்தின் 11 வது ஆண்டு நிறைவு இன்று (பெப்ரவரி 22)

நியூசிலாந்தில் அதிகரித்து வரும் COVID-19 தொற்றுநோய் காரணமாக, வருடாந்திர நினைவு தினத்தில் இன்று ஒரு சிலரே கலந்து கொண்டனர்.

கிறிஸ்ட்சர்ச் மேயர் லியான் டால்சீல், நகர மையத்தில் உள்ள கேன்டர்பரி தேசிய நினைவகத்தின் அடிவாரத்தில் கிறிஸ்ட்சர்ச் சார்பில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 24 பேர் சீன மாணவர்கள் ஆவர்.

2011 பெப்ரவரி 22 கிறிஸ்ட்சர்சில்  ஏற்பட்ட இந்த பேரழிவைத் தொடர்ந்து, நியூசிலாந்து அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரில், சீன அரசாங்கம் 10 பேர் கொண்ட தேடல் மற்றும் மீட்புக் குழுவை அனுப்பியது.

6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், 4 கி.மீ ஆழத்தில் நகரைத் தாக்கியது. பின்னர் அந்த நேரத்தில் நியூசிலாந்து பிரதமர் ஜான் கீ இந்த பேரழிவை "நியூசிலாந்தின் இருண்ட நாள்" என்று விவரித்தார்.

இந்த நிலநடுக்கம் கிறிஸ்ட்சர்சில் கணிசமான அழிவை ஏற்படுத்தியது. புள்ளிவிவரங்கள் 1,200 க்கும் மேற்பட்ட வணிக கட்டிடங்கள் அழிக்கப்பட்டதாகவும், சுமார் 90 சதவீத குடியிருப்பு வீடுகள் பல்வேறு அளவுகளில் சேதமடைந்ததாகவும் தெரிவித்தது.

சொத்து இழப்புகள் ஒருபுறம் இருக்க இந்த பேரழிவில் பூமியை நீங்கி சென்ற உயிர்களின் இழப்பு என்றும் நியூசிலாந்து மக்களுக்கு நெஞ்சில் ஆறாத வடு தான்.