இன்று நியூசிலாந்தில் 2365 கொவிட் தொற்றுகள் சமூகத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் இரண்டு கொவிட் தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மிடில்மோர் மருத்துவமனையில் ஒருவரும் ஆக்லாந்து நகர மருத்துவமனையில் ஒருவரும் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

இன்றைய சமூக தொற்றுகளில் ஆக்லாந்தில் 1692 பேரும், வைகாடோவில் 136 பேரும், Bay of Plenty இல் 42 பேரும், Tairawhiti இல் 09 பேரும், Hawke's Bay இல் 23 பேரும், Mid Central இல் 14 பேரும், நோர்த்லேண்டில் 50 பேரும், தரணகியில் 09 பேரும், Capital and Coast இல் 89 பேரும், Wairarapa வில் 08 பேரும், Nelson Marlborough வில் 58 பேரும், Canterbury இல் 105 பேரும், South Canterbury ஒருவரும், தெற்கில் 86 பேரும், Lakes இல் 24 பேரும், Hutt Valley வில் 19 பேரும், Whanganui இல் 05 பேரும், தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சகம் உறுதிபடுத்தியுள்ளது.

இதனிடையே தீவிர சிகிச்சை பிரிவில் ஒருவர் உட்பட 116 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டின் எல்லையில் 12 கொவிட் தொற்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

தொற்றுநோய் பரவல் தொடங்கியதிலிருந்து இதுவரை நியூசிலாந்தில் அடையாளம் காணப்பட்ட தொற்றுகளின் மொத்த எண்ணிக்கை 28,360 ஆகும்.

இதனிடையே நாட்டில் நேற்றையதினம்  1338 முதல் டோஸ்கள், 649 இரண்டாவது டோஸ்கள் மற்றும் 15,441 பூஸ்டர் டோஸ்கள் வழங்கப்பட்டன.

மேலும் நாட்டில் நேற்றையதினம் 1122 குழந்தைகளுக்கான கொவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டன.