Upper Hutt இல் உள்ள ரிமுடகா சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்ற கைதி ஒருவர் இன்று மத்திய மாஸ்டர்டனில் (central Masterton) கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜான் டக்ளஸ் வில்லிஸ் என்ற 59 வயதான குறித்த நபர் வெள்ளிக்கிழமை பிற்பகல் தப்பிச் சென்ற நிலையில் இன்று மதியம் 1 மணிக்குப் பிறகு பிடிபட்டார் என்று பொலிசார் ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்தனர்.

தப்பி ஓடியதில் இருந்து அவர் எங்கே இருந்தார் என்று பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவர் எப்படி தப்பினார் என்ற விவரம் வெளியாகவில்லை.

இந்நிலையில் காவலில் இருந்து தப்பியதாக வில்லிஸ் மீது குற்றம் சாட்டப்பட்டு நாளை காலை நீதிமன்றத்தில் அவர்  ஆஜர்படுத்தப்படுவார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.