நோர்த்லேண்டின் சில பகுதிகளில் புயல் வீசக்கூடும் என MetService தெரிவித்துள்ளது.

மேலும் Kaitaia வின் தெற்கே உள்ள பிராந்தியத்தின் உள் மற்றும் மேற்குப் பகுதிகளில் கடுமையான இடியுடன் கூடிய மழை பெய்யும் என MetService எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.

மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புயல் அல்லது வெள்ளம் மற்றும் சரிவுகள் ஏற்படலாம் குறிப்பாக நீரோடைகள், ஆறுகள் அல்லது குறுகிய பள்ளத்தாக்குகளுக்கு அருகில் வெள்ளம் மற்றும் சரிவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக MetService தெரிவித்தது‌.