நியூசிலாந்தில் கொவிட் தொற்றின் தினசரி பாதிப்பு முதன்முறையாக 2000 ஐ தாண்டியுள்ளது.

அந்தவகையில் இன்று 2522 கொவிட் தொற்றுகள் சமூகத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இன்றைய சமூக தொற்றுகளில் ஆக்லாந்தில் 1799 பேரும், வைகாடோவில் 188 பேரும், Bay of Plenty இல் 86 பேரும், Tairawhiti இல் 12 பேரும், Hawke's Bay இல் 24 பேரும், Mid Central இல் 13 பேரும், நோர்த்லேண்டில் 41 பேரும், தரணகியில் 09 பேரும், Capital and Coast இல் 54 பேரும், Wairarapa வில் 14 பேரும், Nelson Marlborough வில் 53 பேரும், Canterbury இல் 76 பேரும், South Canterbury ஒருவரும், தெற்கில் 111 பேரும், Lakes இல் 11 பேரும், Hutt Valley வில் 25 பேரும், Whanganui இல் 02 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சகம் உறுதிபடுத்தியுள்ளது.

இதனிடையே 100 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டின் எல்லையில் 17 கொவிட் தொற்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

தொற்றுநோய் பரவல் தொடங்கியதிலிருந்து இதுவரை நியூசிலாந்தில் அடையாளம் காணப்பட்ட தொற்றுகளின் மொத்த எண்ணிக்கை 30,694 ஆகும்.